Wednesday, September 16, 2026

இதுவரை அறிந்திடாத ஒன்று! புது வீடு கட்டுவதற்கு முன் இதையெல்லாம் பார்த்தே ஆகனும்.

நாம் ஆசையாக கட்டப் போகும் வீடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கணவில் கோட்டையே கட்டி வைத்திருப்போம். கட்டுமான பணிகளை செய்பவர்கள் எப்படி வீட்டை கட்ட போகிறாறோ தெரியவில்லை என்ற கவலை அனைவருக்கும் இருக்கக் கூடியதுதான்.

மனையின் அளவு

மனையின் சதுரம் கட்டும் பொழுது 90 டிகிரி அளவு மூலைவிட்டம் கொண்டு அளந்து செய்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். மண் பிடிமானம் இல்லை என்றால் திமிசு கட்டையை பயன்படுத்தி மட்டம் தட்ட வேண்டும். தரை மட்டத்திலிருந்து, கட்டிடத்தின் பேஸ்மென்டை உயரமாக வைக்க வேண்டும்.

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்

கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது, வாட்டர் லெவல் டூயுப் பயன்படுத்துகிறார்களா! என்பதை பார்க்க வேண்டும். செங்கல்லை நனைத்த பிறகு தான் கட்டிட பணிகளை செய்கிறார்களா! என்பது பார்க்க வேண்டிய விஷயமாகும். செங்கல் கல் வைத்து அடுக்கடுக்காக கட்டும்பொழுது கடைசியில் குத்துக்கல்லாக வைத்து கட்டப்படுகிறதா! என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். பெல்ட், அஸ்திவாரம் மற்றும் லிண்டல் போன்ற பணிகளில், லெவல் டுயூப் பயன்படுத்தப்படுகிறதா! என்பதை கட்டாயம் பார்க்க வேண்டும்.

ஒரு நாளில் 5 அடிக்கு மேலாக கட்டிடங்களை கட்ட அனுமதிக்க கூடாது. ஏனென்றால், கட்டிடம் எளிதில் பலவீனம் ஆகிவிடும்.

கட்டிட கலவையின் போது சிமெண்ட், ஜல்லி மற்றும் மணல் நன்கு கலக்கப்படுகிறதா மற்றும் அதில் களிமண் கட்டிகள், கற்கள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால், கலவையில் உள்ள கட்டிகளை ஜல்லடையை  வைத்து நீக்க வேண்டும்.

எலக்ட்ரிக்கல் அமைக்கும் பொழுது சமமான அளவு பொருத்தப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *