வெளுத்து வாங்கும் வெயிலால் ஸ்கின் எளிதில் கருத்து விடும். எந்தவித சன் கீரிமும் கைக் கொடுக்காது. மற்றும் பல விதமான கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகிப்பதாலும் முகம் கருத்து விடுகிறது. இதற்கு சிவப்பு சந்தனம் எந்த விதத்தில் பயனளிக்கிறது என்பதை பார்க்கலாம்.
சிவப்பு சந்தனம்
சிவப்பு சந்தனத்தின் அறிவியல் பெயர் டெரோகார்பஸ் சாண்டலினஸ் எல் ஆகும். இது ஆயுர்வேதத்தில் உபயோகப்படுத்தப்படும் அதிக மருத்துவக் குணம் நிறைந்த தாவரமாகும். இன்றளவும் இந்த சந்தனத்தின் சிறப்புகள் யாருக்கும் தெரியவில்லை.
ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல பல இடங்களில் சிவப்பு சந்தனம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் பண்புகள் சொரியஸிஸ், முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பு, ஹைப்பர் பிகமென்டேசன், முகப்பரு, முகச்சுருக்கம், தசை வீங்குவது போன்ற அனைத்திற்கும் தீர்வாக உள்ளது.

இது முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை மீட்டெடுத்து, வெளியேற்றிவிடும். வறண்ட சருமம் உடையவர்கள் பாலுடன் தேனை கலந்து உபயோகிக்கும் போது, சருமத்தில் வறட்சி நீங்கி முகம் பொழிவுடன் இருக்கும். பருக்களினால் உண்டாகும் சுவடுகளையும் நிக்குகிறது.
சரும நிறத்தை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் மற்றும் பாதம் எண்ணெயை சிவப்பு சந்தனத்துடன், கலந்து முகம் முழுவதும் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.

முகத்தில் உள்ள அதிகப்படியான கருமைகள் நீங்குவதற்கு ஒரு கரண்டி சிவப்பு சந்தனத்தை எடுத்துக் கொண்டு பால் சிறிதளவு, ரோஜா பன்னீர் சிறிதளவு கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கருமை நீங்கி விடும். தொடர்ச்சியாக இதனை பின்பற்றி வரும் போது, முகத்தில் உள்ள கருமை முற்றிலும் மறைந்து விடும்.