Saturday, August 1, 2026

இத்தனை விஷயங்கள் உள்ளதா!..நாம் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்.

நாம் தினமும் ஒரு சில பழக்கத்தை கடைப்பிடித்துக் கொண்டு வருகிறோம். ஆனால் நாம் சாப்பிட முடித்த பிறகு செய்யவே கூடாத சில பழக்கங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய பானங்கள்

ஒரு சிலர் சாப்பிட்டு முடித்த பிறகு டீ காபி குடிக்கும் பழக்கம் உடையவராக இருப்பார்கள். ஆனால் அப்படி குடிப்பது உடல் நலத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்த பானங்களில் உள்ள அமிலத்தன்மை, நான் சாப்பிடக்கூடிய உணவில் உள்ள ப்ரோட்டீனை கடினமாக்குகிறது. இதனால் செரிமானக் கோளாறுகள் உண்டாகிறது. சாப்பிட்டு சில நேரங்களுக்கு பிறகு டீ காபி அருந்துவது நல்லது.

புகை பழக்கங்கள்

ஆண்களுக்கு சாப்பிட்டவுடன் புகை புடிப்பது வழக்கம். சாதாரணமாக புகைப்பிடிக்கும் போதே உடலில் உள்ள உறுப்புகள் சேதமடைய தொடங்கும். காபி,டீ போன்றவற்றை பருகி விட்டு சிகரெட் குடிக்கும் பொழுது, அது பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடும். அதவாது ஒரே நேரத்தில் 10 சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால், புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆதலால் சிகரெட்டை தவிர்ப்பது நல்லது.

உறங்க செல்லுதல்

நாம்  சாப்பிட்டு முடித்த பிறகு இரவோ அல்லது காலையோ உடனே தூங்கச் செல்வது ஒரு சிலரின் வழக்கம். ஆனால் அப்படி நாம் தூங்கும் பொழுது, சரியான ரத்த ஓட்டம் கிடைக்காததால், உணவு எளிதில் செரிமானம் அடையாது. இதனால் செரிமான கோளாறு ஏற்படக்கூடும். 1 அல்லது 2 மணிநேர இடைவெளிக்கு பின்னர், தூங்கச் செல்ல வேண்டும்.

குளியல்

கட்டாயமாக சாப்பிட்டவுடனே குளிக்கப் போகும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. நாம்  சாப்பிட்ட உடனே குளிக்கச் செல்லும் பொழுது, நமது உடலில் ரத்த ஓட்டம் வேகமாகிறது. இதனால் செரிமானத்திற்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம்  தடைப்படுகிறது. இதனால் சாப்பிட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு குளிப்பது நல்லது.

தண்ணீர் அருந்துவது 

தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சாப்பிட உடன் தண்ணீர் குடிப்பதுதான் அனைவரிடத்திலும் உள்ள பழக்கம். ஆனால் இப்படி சாப்பிட்டு முடித்தப் பின், நாம் தண்ணீர் அருந்தும் பொழுது தேவையான சுரப்பு நீர் வற்றி போக வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, இப்படி தண்ணீர் அருந்தும் பொழுது நெஞ்செரிச்சலும் ஏற்படக்கூடும். இதனால் சாப்பிடும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அருந்துவது நல்லது.

நடைபயிற்சி

சாப்பிட்ட முடித்த பிறகு நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி நாம் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது உடலில் ஜீரணக் கோளாறுகள் ஏற்படுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். ஆனால் சாப்பிட்டு 30  நிமிடம் கழித்து, மெதுவாக நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், ஜீரண உறுப்புக்கும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *