இப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கூன் விழுகத் தொடங்கி விட்டது. கூன் விழுவதற்கு முதல் அறிகுறியே, முதுகு, மூட்டுகள் மற்றும் கழுத்தில் ஏற்படும் அதிக அழுத்தத்தினால், வலி உண்டாகும்.
முக்கியமாக வேலைப்பளு அதிகம் நிறைந்தவர்களுக்கு முதுகுவலி விரைவில் ஏற்படுகிறது. கழுத்தில் இருந்து இடுப்பு வரை நீண்டிருக்கும் முதுகு தண்டு. ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்காரும்பொழுது நம்மை அறியாமல் குனிகிறோம். அதனால் நமது உடலில் முதுகு தண்டுவடம் வளைந்து, பெரும் வலியை ஏற்படுத்தக்கூடும்.

முதுகுத்தண்டில் வெர்டிரே என்ற 24 எலும்புகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டிருக்கும். கூன் விழும் பொழுது ஒரு சில அறிகுறிகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். சாதாரணமாக இல்லாமல் கழுத்து மற்றும் இடுப்புப் பகுதிகள் பலமாக வலிக்கும். மற்றும் வெர்டிப்ரேவின் நடுப்பகுதி சற்று விலகி இருக்கும்.

சாதாரணமாகவே நமது முதுகு சிறிது வளைந்து தான் காணப்படும். ஏனென்றால், இதயம் மற்றும் நுரையீரல் இருப்பதற்கான ஒரு பகுதி இடங்கள் ஒதுக்கப்படுகிறது. நாம் உட்காரும்பொழுது குனிந்து உட்காரும் பழக்கத்தை கொண்டிருப்பது, மொபைல் போனை அதிக நேரம் குனிந்தபடியே பார்ப்பது, ஸ்கூல் பேக்குகளை அதிக எடையுடன், தூக்கி செல்வது போன்ற காரணங்களால் முதுகு தண்டுவடம் வளையத் தொடங்கும்.
கருவில் கூன் விழுவது
கருவிலேயே குழந்தை இருக்கும் பொழுது ஏதாவது ஒரு சீர்குலைப்பின் காரணமாக, பிறவியிலேயே கூன் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி, வயதாகத் தொடங்கும் பொழுது நமது முதுகு வலுவிழந்து தசை நார்கள் வழுவிழந்து தேய்மானம் ஏற்பட்டு கூன் விழத் தொடங்குகிறது.

சரி செய்யும் முறை
நம் உட்காரும் பொழுது நேராக அமர பழக வேண்டும். நாம் காலையில் யோகா அல்லது உடற்பயிற்சி 30 நிமிடத்திற்கு, செய்ய வேண்டும். அதிக எடை உள்ள பொருட்களை சுமந்து செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரே இடத்தில் அமராமல், பத்து நிமிடத்திற்கு ஒருமுறை 10 எட்டுகளாவது எடுத்து வைக்க வேண்டும். இதன் மூலம் முதுகெலும்பு கூன் விழுவதை தவிர்க்கலாம்.