Saturday, August 1, 2026

தமிழத்தின் பிரபல சுற்றுலா தளங்கள் ….!!! சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க ….!!

தமிழத்தின் பிரபல சுற்றுலா தளங்களை பற்றி காண்போம் .

மெரினா கடற்கரை:

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மேலும்  இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையாக மெரினா உள்ளது. அதோடு சென்னைக்கு ஒரு முக்கிய அடையாளமாக மெரினா கடற்கரை விளங்குகிறது. இது   வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை  அமைந்துள்ளது.மேலும் தமிழக சுற்றுலா தளங்களில் மெரினா கடற்கரை முக்கிய பங்கு வகிக்கிறது .

நீலகிரி மலை :

தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றானது நீலகிரி மலை. நீலமலை என  அழைக்கப்படும் நீலகிரி மலையின் மலைத்தொடர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டத்திற்கு நீலகிரி என்ற பெயர் பெற்றது. மேலும் இது மலைகளின் ராணி என அழைக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் ஊட்டி ஆகும். அதோடு நீலமலை ஒரு மலை வாழிடமாக விளங்குகிறது . மேலும் இம்மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும்.மேலும் நீலகிரி மலையின் மலை ரயில் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக விளங்குகிறது.அதோடு சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு மலை ரயிலில் பயணம் செய்து மகிழ்வார்கள்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரமாக விளங்குகிறது. மேலும் திருவள்ளுவர் சிலை,விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை, குமரி கடற்கரை போன்ற பல இடங்கள் கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களாக அமைந்துள்ளது . அதோடு குமரி கடற்கரையின் அழகை காண சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருவார்கள். மேலும் கடற்கரையில் சூரிய உதயம் ,மறைவை காண்பதற்கு அழகாக இருக்கும்.

செட்டிநாடு மென்ஷன்ஸ்:

செட்டிநாடு என்பது தமிழகத்தில் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர்களை குறிக்கிறது.தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாடு பகுதி அதன் பிரமாண்டமான மற்றும் செழுமையான மாளிகைகளுக்கு பெயர் பெற்றது.இந்த பாரம்பரிய செட்டிநாடு வீடானது சிக்கலான மரவேலைகள், அழகான முற்றத்தில் தோட்டங்கள் மற்றும் அப்பகுதியின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.மேலும் பழங்கால அலங்கார பொருட்களும்,பாரம்பரிய மாளிகைகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

மகாபலிபுரம் :

மகாபலிபுரம் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடங்களில் மகாபலிபுரம் ஒன்றாகும். அதுமட்டுமின்றி இது தென்னிந்தியாவின் புனிதமான இடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது பல்லவர் காலத்தில் பிரபலமாக இருந்த பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கிறது. மேலும் யுனெஸ்கோ இந்த பழமையான கோயிலை உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.

கடற்கரைக் கோயில், பஞ்ச ரதங்கள், வராஹ குகைக் கோயில், நினைவுச் சின்னங்கள்,கிருஷ்ணரின் பட்டர்பால், மகாபலிபுரம் கடற்கரை, கிருஷ்ணா மண்டபம் உள்பட பல கோவில்களும்,சிற்பங்களும் மகாபலிபுரத்தில் முக்கிய இடங்களாக விளங்குகிறது.

பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள்:

பிச்சாவரம்  கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகே ‘கிள்ளை‘ என்னும் ஊரில் அமைத்துள்ளது . மேலும் இங்குள்ள சதுப்புநிலக்காடுகள் உலகின் இரண்டாவது பெரிய  சதுப்புநிலக்காடு ஆகும்.மேலும் சதுப்புநிலங்களின் அடர்ந்த விதானம்,பின்னிப் பிணைந்த நீர்வழிகள் மற்றும் ஏராளமான பறவைகள் ஆகியவை இதை ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஆக்குகின்றன.

 

மீனாட்சி அம்மன் கோவில்:

மீனாட்சி அம்மன் திருக்கோவில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.மேலும் இக்கோவில்  ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக விளங்குகிறது.இக்கோவிலை பாண்டிய பேரரசர் சடையவர்மன் குலசேகரன் என்பவரால் கட்டப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 14 நுழைவு கோபுரங்கள் உள்ளது. இக்கோவில் கோபுரங்களில் காணப்படும் நுணுக்கமான சிற்பங்கள்,  ஓவியங்கள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்கள் ஆகியவை சிறப்பாக விளங்குகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *