அப்படி வாழவேண்டும் இப்படி வாழ வேண்டும் என்று நினைப்பது இங்கு அனைவரும் இயல்பாக யோசிக்கும் ஒன்றுதான். நம் வாழ்வில் சில பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம், நமது வாழ்வை நல்ல முறையில் எடுத்துச் செல்ல முடியும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது நமது உடலிற்கு நல்ல ஆற்றலை அளிப்பதுடன், மனதிற்கும் நல்ல ஒரு அமைதியான சூழலைக் கொடுக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் நாம் மகிழ்சியாக உணர்க்கிரோம். இதுமட்டுமின்றி சுய எண்ணங்ககளை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் காலையிலோ அல்லது மாலையிலோ நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, உடல் புத்துர்ணவு பெற்று மனம் மகிழ்ச்ச்சியடைகிறது.

புன்னகை
நாம் புன்னகை செய்யும்போது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், சுறுசுறுப்பாக வேலை செய்கின்றது. நாம் சிரிக்கும் பொழுது மூளை டோபமைனை வெளியிடுகிறது. இதுதான் சிரிக்கும் பொழுது, மகிழ்ச்சிக்கு காரணமாகிறது. காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன் நின்று, சிரித்துப் பாருங்கள் அந்த நாளின் நல்ல மாற்றம் உங்களுக்கே தெரியும்.
தூக்கம்
மொபைலை பார்த்தால் போதும் தூக்கம் காணாமல் போய்விடுகிறது பல பேருக்கு, அந்த அளவிற்கு மொபைல் அனைவரையும் ஈர்த்து வைத்துள்ளது. பகலில் சோர்வாக உணர்ந்தால் இரவு தூக்கம் போதவில்லை என்று அர்த்தம். இரவில் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இது உடலிற்கும் , முளைக்கும் சுறுசுறுப்பைக் கொடுக்கிறது.
பாராட்ட பழகுங்கள்
நாம் தற்பெருமை கொள்வதை விட, ஒருவரை பாராட்டும் பொழுது நம் மனம் மகிழ்ச்சி அடைகிறது, என ஆய்வுகள் கூறுகிறது. ஒருவர் ஒரு செயலை சிறப்பாக செய்வதற்கும், செய்த முடித்த பிறகும் நீங்கள் அவர்களை நேருக்கு நேர் நின்று, பாராட்டுங்கள் உங்கள் மன மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

ஒப்பிடாதீர்கள்
உங்களை மற்றவர்களுடன் எக்காரணத்தை கொண்டும் ஒப்பிடாதீர்கள். ஏனென்றால், இது நம் மன மகிழ்ச்சியை கெடுக்கும். நம்மை விட மோசமான சூழலில் எத்தனை பேர் இருக்கிறார்கள் மற்றும் கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் வாழ்க்கை, மிகவும் அழகானது என சிந்தியுங்கள்.