Saturday, August 1, 2026

என்னது ஜன்னல் இல்லாத அறையில் வெளிச்சத்தை ஏற்பட்டுத்த முடியுமா?. அது எப்படினு பார்க்கலாம்.

இப்பொழுது வீடு கட்டும் அனைவரும் சிறிதளவும் இடம் விடாமல் வீட்டை கட்டி முடிக்கின்றனர். ஆதலால் ஜன்னல் வைப்பதற்கு வசதி இல்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் இருக்கட்டும் ஜன்னல் இல்லாத வீட்டை பிராகசிக்க வைப்பது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
நகர் புறங்களில் சாதாரணாமாகவே கட்டிடங்ககளை நெருக்கி கட்டியிருப்பார்கள்.

இடப்பிரச்சனைகள் வரக் கூடும் என்பதால் அவ்வாறு கட்டியிருப்பார்கள். ஆனால் வீடுகளில் வெளிச்சம் இருந்தால் தான் பார்ப்பதற்கும், மனதிற்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.
வெளிச்சமானது நமது எதிர்மறை எண்ணங்களை மாற்றக் கூடியது. இதே இருட்டு அறையில் இருந்தால் நம் எண்ண ஓட்டங்கள் எதிமாறையாகத் தான் அமையும்.

அறையில் வெளிச்சத்தை உருவாக்க வழிகள் இதோ!

உங்கள் அறையில் ஜன்னல் இல்லையேன்றால், ஒரு சில கனமான பொருட்களை தவிருங்கள். இதற்கு பதிலாக, கண்ணாடியிலான பொருட்களை உபயோகியுங்கள். ஏனென்றால், இவை வீட்டிற்குள் நுழையும் ஒளியை தடுக்காது.

பர்னிசர்களை வாங்கும் பொழுது லேசான நிறத்தில் வாங்க வேண்டும். குறிப்பாக சோபா வாங்கும் பொழுது பழுப்பு, பீச் மற்றும் வெள்ளை கலர்களில் வாங்க வேண்டும். இது பார்ப்பதற்கும் கலர்புல்லாக இருக்கும். வீட்டை கட்டும் பொழுதே அலமாரிகள் வைத்து கட்டுவது நல்லது. இந்த அலமாரிகள் வீட்டில் நுழையும் வெளிச்சத்தைத் தடுக்காது.

ஜன்னல் கட்டப்படாத வீட்டில் தரையில் பொருத்தப்படும் டைல்ஸ் வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும். வேற நிறத்தில் அமைந்திருந்தால், வெள்ளை நிற விரிப்புகளை பயன்படுத்தலாம். அது நமக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.

வீட்டில் இருக்கும் கதவுகளை மரக் கதவுகளாக செய்ய வேண்டும். இல்லையென்றால் கண்ணாடி கதவுகளை வைக்க்கலாம். இதன் மூலம் வீட்டிற்குள் நல்ல ஒளியை உணரலாம்.

வீட்டிற்கு வண்ணம் தீட்டும் பொழுது, பழுப்பு நிறத்தில் அல்லது வெள்ளை நிற பெயிண்டை தேர்ந்தெடுக்க வேண்டும். இது நம் மனதிற்கு நேர்மறையான எண்ணங்களை வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *