Saturday, August 1, 2026

ஆச்சரியமான விஷயங்கள்!..வாழைப் பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா?…

வாழைப் பழங்களில் இருக்கும் பல நன்மைகளை பற்றி நாம் அறிந்ததே!..வாழைப் பழத் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கிறது.

இந்த வாழைப்பழங்கள் கோடைக் காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் கிடைக்கக் கூடிய அறிய வகை பழமாகும். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். மற்றும்  மலச்ச்சிக்கல் இருந்தால் நீங்கிவிடும்.

வாழைத் தோல் 

நம் கைகளிலோ, கால்களிலோ கண்ணாடிச்சில் மற்றும் முள் குத்திவிட்டால், வாழப் பழத்தோலைக்  கொண்டு அந்த இடத்தில் தடவ வேண்டும். பின்னர் முள் அல்லது கண்ணாடிச்சில் வெளி வந்துவிடும்.

சரும நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாழைத் தோலை தினசரி பயன்படுத்தி வரும் போது நமது சரும சம்மந்தமான சொரியாசிஸ் போன்ற நோய்கள் சரியாகி விடும் மற்றும் தடிப்பு, எரிச்சல் போன்றவை குணமடையும்.

காலையில் எழுந்தவுடன், வாழைத் தோலை கொண்டு பல் துலக்கி வரும் போது நமது பற்களில் உள்ள கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

மருக்கள் உள்ளவர்கள் வாழைத் தோலை முகத்தில் தடவி வரலாம். மருக்கள் உள்ள இடத்தில் வாழைப் பழத் தோலினை இரவு முழுவதும் கட்டி வைக்க வேண்டும். நாளடைவில் மருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும்.

ஏதாவது பூச்சிகள் கடித்தாலோ அதனால் வீக்கம் ஏற்படும் போது வாழைப்பழத் தோலை தடவி வந்தால் குணமாகிவிடும்.

வாழைப்பழத் தோலில் இருக்கக்கூடிய என்சைம் முகத்தில் உள்ள பருக்களை சரி செய்கிறது. வாழைப்பழத் தோலில் ஏராளமான நன்மைகள் உள்ளது என ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். மற்றும் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுக்கள் புற்று நோயை கட்டுப்படுத்தக் கூடியதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *