நாம் காணும் இடமெல்லாம் குப்பை, தெருக்களில் கால் வைக்க முடியாத சூழல், மாசு கலந்த காற்று, அதிக தூசுக்கள் நிறைந்த தண்ணீர் மற்றும் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் போன்று பல்வேறு அசுத்தம் நிறைந்த இடத்தில் தான், அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் இருக்கையில், ஆனால் ஒரு கிராமம் மட்டும் சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றுகிறது.
நாம் அனைவரும் நினைப்பது அந்த கிராமம் வெளிநாடுகளில் இருக்குமோ!..ஆனால் இல்லை அந்த தூய்மை கிராமம் நமது இந்தியாவில் அமைந்துள்ளது. மேகாலயா மாநில தலைநகரிலிருந்து 75 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மாவ்லின்னாங் கிராமம். எங்கு நோக்கிலும் இந்த கிராமம் சுத்தமாக காணப்படுகிறது. ஆசியாவில் இந்த கிராமம், தூய்மை நிறைந்த கிராமம் என்று முதலிடத்தை பிடித்துள்ளது.

மூங்கில் கூடைகளால் அங்குள்ள வீடுகள் மற்றும் நகர்ப்புறங்களில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பின்பு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியே பிரித்து ஒரு பெரிய குழியை தோண்டி புதைக்கப்படுகின்றன.

ஜூன் மாத காலங்களில் முழு கிராமமே சேர்ந்து, மரக்கன்றுகளை நட்டுகிறார்கள். நீர்பிடிப்புகளில் தூசியோ, பாசனமோ தங்காத அளவிற்கு நீர்ப்பகுதியினை பாதுகாக்கிறார்கள். ஊர் முழுவதும் பூக்கள் மற்றும் அழகான இயற்கை காட்சிகளில், பல வண்ணங்களுடன் ஜொலிக்கிறது. மாலின்னாங் கிராமத்தில், சிமெண்ட் வீடுகளோ அல்லது கான்கிரீட் வீடுகளோ இல்லை. முழுவதும் மூங்கில் வீடுகள் மற்றும் மண் வீடுகள் அக்கிராமத்தில் அழகாக தோற்றமளிக்கிறது.
வித்தியாசமான இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் ஒரு முறையாவது நம் இந்தியாவில் உள்ள மாலின்னாங் கிராமத்தில் உள்ள அதிசயத்தை பாருங்கள்.