பெருநாட்டில் உள்ள கல்லறையில் வித்தியாசமான ஒரு மம்மியின் உருவம் கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மம்மி என்பது பழங்காலத்திலிருந்து இக்காலம் வரையிலும், மனிதன் அல்லது விலங்குகளின் சடலத்தை வேதிப்பொருட்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருவது தான் மம்மி ஆகும். இவ்வாறு காலத்தில் அழித்திட முடியாத, மனித மம்மிகளையும், விலங்குகளின் மம்மிகளையும் ஆராய்சியாளர்கள் கண்டெடுத்து வருகின்றன.
1940 இல் சிலி நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மம்மி தான் இவ்வுலகில் பழமையான மம்மி. இது 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் சடலமாகும்.

பண்டைய கால எகிப்தியர்கள், இறந்தவர்களின் உடலை, கடவுள் முன் வைத்து மம்மியாக்குவது வழக்கம். இதன்மூலம் இறந்தவர்களின் ஆன்மா மீண்டும் அந்த உடலுக்குள் வந்தடையும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். பல அலங்காரங்களுடன் இந்த மம்மிகளை பதப்படுத்தி வைப்பார்கள்.
இப்படி எகிப்தியர்கள் பதப்படுத்தி வைத்த, உடல் என்னும் மண்ணில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அகழ்வாராய்சியில் இன்னும் ஆயிரக்கணக்கான மம்மிகள் தோண்டி எடுக்கப்பட்டுதான் வருகின்றன.
இந்நிலையில், தென் அமெரிக்காவில் உள்ள பெரு எனும் நாட்டில் உள்ள கல்லறையில் ஒரு மர்மமான மம்மி கண்டெடுக்கப்பட்டது. இது கை கால் மற்றும் முகத்தை மறைத்த நிலையில் இருந்தது. 2021 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியில் கயிறுகளால் கட்டப்பட்டு முகத்தை மூடிய நிலையில் மம்மி கண்டெடுக்கப்பட்டது, பெரு நாட்டின் தலைநகர் லிமாவிலிருந்து சுமார் 15.5 மைல் தூரத்தில் உள்ள காஜாமார்குல்லா எனும் இடத்தில் மம்மி நல்ல நிலையில், இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த மம்மி 800 முதல் 1200 ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மம்மியின் உடல் இறுதிச் சடங்கு நடத்தி, புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள்ள நம்புகின்றன. மேலும் அந்த கல்லறையில் மண்பாண்டங்கள், காய்கறிகள் மற்றும் பலவித பொருள்கள் இருந்தன.