இப்போதைய இளம் பெண்களுக்கு முகச்சுருக்கம் விரைவில் வந்துவிடுகிறது. இதனால் சருமம் மிகவும் பொழிவிழந்து, வயதானதான தோற்றத்தை கொடுக்கிறது.
சுருக்கத்தை நீக்க பல கிரீம்கள் மற்றும் களிம்புகளை வாங்கி நாம் உபயோகப்படுத்தினாலும், அது எந்த பலனும் அளிப்பதில்லை. எத்தனை வழியிலும் முயற்சித்தாலும் இந்த சுருக்கங்கள் மட்டும் நீங்கவில்லையே, என்று பலர் கவலைப்பட்டு, வருகின்றனர்.
காரணங்கள்:
நாம் முகத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது மற்றும் கெமிக்கல் நிறைந்த கிரீம்கள், பவுடர் மட்டும் சோப்புகளை உபயோகிப்பது தான் காரணம். மற்றும் வெளியில் செல்லும்போது தூசி, காற்று மாசுபாடு காரணங்களாலும் நமது சர்மம் பொலிவிழந்து வரட்சி அடைகிறது. இதனால் சருமம் எளிதில் சுருங்கிவிடுகிறது.

இயற்கையில் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி முகம் பொழிவடைய, பலாப்பழக் கொட்டையை பயன்படுத்தலாம். ஏனென்றால், பலாப்பழ கொட்டையில் புரதம், கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, நார்சத்துக்கள், தியாமின் மற்றும் ரைபோஃப்லேனின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மட்டுமின்றி இரும்பு, துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது.

பாலபழ கொட்டையில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்த சோகையை விரைவில் குணமாக்குகிறது. பலாக் கொட்டையை காயாவைத்து பொடி செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
இப்படி பலவிதமான நன்மைகள் நிறைந்த இந்த பலாக்கொட்டையை நாம் முகத்திற்கு, தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகம் பளபளப்பாகவும் மற்றும் சுருக்கங்கள் நீங்கியும் காணப்படும்.
செய்முறை:
பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி மற்றும் அதனுடன் தோல் நீக்கிய பல கொட்டையை போட்டு ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அத்துடன், தேன் கலந்து அரைத்து அதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.