Saturday, August 1, 2026

இனி கவரிங் நகைகளை புதிதாக மாற்ற முடியும்!.எப்படினு வாங்க பார்க்கலாம்.

தங்கத்திற்கு பதிலாக இப்பொழுது, அனைவரும் கவரிங் நகைகளை உபயோகிக்க பழகி விட்டார்கள். ஒரு சில நாட்களிலேயே இது வெளுத்துப் போகிறது. கவரிங் நகைகள் பளிச்சிட செய்வதற்கு டிப்ஸ் இதோ!.

கவரிங் நகைகள்:

அனைத்து பெண்களும் இப்பொழுது தங்க நகைகளை விட, கவரிங் நகைகளின் மேல் தான் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், கவரிங் நகைகளில் பூசப்படும் முலாம் தான். சில நாட்களிலேயே அந்த முலாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய  தொடங்குகிறது. இதனால் நாம் மறுமுறை அந்த கவரிங் நகையை உபயோகிக்கும் பொழுது, அது கருத்துப் போகிறது.

 

பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு அதை இரண்டாக வெட்டி, கருத்துப் போன நகையை எலுமிச்சை சாற்றில் ஊற வைக்க வேண்டும், பின்பு, ஸ்பூனை எடுத்து இருபுறமும் திருப்பிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் எலுமிச்சை சாறு, நகைகளில் ஊறிவிடும். மற்றும் கருத்துப்போன நகையில், உள்ள தூசிகள் மற்றும் கருமைகள் அனைத்தும் எலுமிச்சை சாற்றில் இறங்கி விடுகிறது. அதனுடம் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் வைத்து மிதமான சூட்டுடன் இறக்க வேண்டும்.

மேலும் அந்த கவரிங் நகையில் மஞ்சள் தூளை தூவி, 5 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் அலாச வேண்டும். பின்பு நகைகளில் இருக்கும் ஈரத்தை துடைத்து விட்டு, முகத்திற்கு உபயோகிக்கும் பவுடரை, நகை மேல் பூச வேண்டும். இதன் மூலம் நம் கவரிங் நகைகள் பளிச்சிட செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *