Saturday, August 1, 2026

உங்களுக்கு நகம் பலவீனமாக இருக்கிறதா? இதுதான் காரணம்!. வெளி வந்த சில உண்மைகள்.

ஆரோக்கியமான நகங்கள் என்பது நமது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் நகத்தின் மேல் அதிகம் அக்கறை கொள்வார்கள். அது சரி நகங்கள் ஏன் திடீரென உடைகிறது, என்று பார்க்கலாம் வாங்க.

காரணங்கள்:

முடியையும், முகத்தையும் பாதுகாப்பு செய்வது போல், நாம் நகங்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் நம்மை அறியாமல் நகம் கடிப்பது, போன்றவையாகும்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்:

நகங்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு, நம் உணவில் முக்கியமாக இருக்கக்கூடியவை; இரும்பு சத்துக்கள், வைட்டமின்கள் ஏ,பி,சி, டி மற்றும் ஈ போன்றவை அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். நகங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த வைட்டமின்கள், முக்கிய பங்காற்றுகிறது. பயோட்டின் நகங்களை உடைக்கக் கூடியதாகும்.

உடல் உபாதைகள்:

உடம்பில் ஏற்படக்கூடிய பூஞ்சைகள், தைராய்டு பிரச்சனைகள், சொரியாசிஸ், போன்ற உபாதைகளால் நகங்கள் எளிதில் பலவீனம் அடையும்.

சரியான உணவு முறைகள்:

சரியான உணவு முறையை நாம் பின்பற்றும்போது, நகங்கள் ஆரோக்கியம் அடைகிறது. நகங்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உணவுகள் இருக்கிறது. உலர் பருப்புகள், சால்மன், முட்டை, தர்பூசணி விதைகள் மற்றும் ஆளிவிதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவைகளில் அதிகம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

 

தண்ணீர்:

ஒரு சிலருக்கு நகங்கள் விரைவில் உடையும். காரணம் நமது உடலில் போதுமான அளவு நீர் இல்லாதது தான். இதற்கு காலை எழுந்து தினமும் 4 டம்ளர் தண்ணீர் அருந்தி வந்தால், நமது நகங்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும்.

ரசாயன பொருட்களை தவிர்க்கவும்:

பெண்கள் உபயோகிக்கும் அசிட்டோன் என்ற நெயில் பாலிசிகளில், அதிகம் கெமிக்கல் நிறைந்திருப்பது, மற்றும் கடுமையான நக கிளீனர்களை தவிர்ப்பது நல்லது. இயற்கைக்கு புறம்பாக இருக்கும் செயற்கை பொருட்களை தவிர்த்து, நங்களை பாதுகாத்து வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *