Wednesday, September 16, 2026

உங்களுக்கு சோம்பலாக இருக்கிறதா?. அப்படினா இதை தெரிஞ்சுக்கோங்க.

சோம்பல் என்பது அனைவரும் இப்பொழுது சந்திக்கக்கூடிய பிரச்சனையாகும். இந்த சோம்பல் பல வேலைகளும் முடுக்கப்படுகின்றன. இதெல்லாம் இருக்கட்டும், சோம்பல்களில் 7 வகையான சோம்பல் உள்ளது.
1.குழப்பம்

இதை எப்பொழுது செய்ய வேண்டும்’ ‘நான் இப்படி செய்து விட்டேனே’ மற்றும் பல சிந்தனைகளை மனதில் ஏற்றுக் கொள்வதும் ஒரு சோம்பல் தான். இந்த குழப்பத்தில் செய்ய வேண்டியதை அப்பவே செய்து முடிக்க வேண்டும். இதிலிருந்து நாம் சோம்பலை தடுக்க முடியும்.

2. அக்கரையின்மை

எதைப் பற்றியும், நான் சிந்திப்பதில்லை மற்றும் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்போர்கள் மட்டும், உங்களுக்கு எந்த வேலை மேல் நாட்டம் உள்ளதோ அந்த வேலையை செய்து முடியுங்கள். அந்த வேலையை முழு அக்கறையுடன் இருங்கள். இது உங்கள் சோம்பலை தவிர்ப்பதற்கான ஒரு வழியாகும்.

3.வருத்தம்

ஏதேனும் ஒரு வேலையை துவங்குவதற்கு முன் எனக்கு வயதாகிவிட்டது மற்றும் என்னால் இந்த வேலையை செய்ய முடியாது என்று நினைப்போருக்கு, நிச்சயம் சோம்பேறித்தனம் இருக்கும். காலம் தாழ்ந்து விட்டதே என்று யோசிக்காமல், அந்த வேலையில் ஈடுபடுங்கள், இதன் மூலம் உங்களது தன்னம்பிக்கை மற்றும் திறமையை அதிகரிக்க முடியும்.

4.நரம்பியல் பயம்

புத்தகம் வாசிப்பதற்கோ அல்லது மேடைப்பேச்சின் போதோ, கை நடுங்கும் பொழுது நாம் முன்னர் அனைத்து விஷயங்களை யோசித்துப் பார்த்தால், இது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது. எங்கு சென்றாலும் தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள். இது பயத்தை மட்டுமல்ல, சோம்பேறித்தனத்தைஒலித்துக்கட்டும்.

5.வாக்குமோலம்

நான் சோம்பேறித்தனமாக, இருக்கிறேன் இன்று யாரிடமும் வாக்குமூலம் கொடுக்காதீர்கள். அப்படி கூறும் பொழுது உங்கள் வார்த்தையை, மூளை அப்படியே நம்பி விடுகிறது. இதனால் நீங்களே உங்களைப் பற்றி தாழ்வாக பேசுவதை, தவித்து விடுங்கள்.

6.சுறுசுறுப்பின்மை

நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன் எனக்கு எனர்ஜி இல்லை என்பதை நீங்களே ஒத்துக்கொள்ள வேண்டாம். எனர்ஜியை இழக்கும் பொழுது, மீண்டும் ஒருமுறை இந்த விஷயத்தை செய்ய வேண்டும் என உங்களுக்குள்ளே சொல்லி பாருங்கள். இதன் மூலம் உங்களது உடம்புக்கு அதிக ஆற்றல் கிடைக்கும்.

7.நிரந்தரமான மனநிலை

நான் தோற்று விடுவேன் மற்றும் மற்றவர்கள் என்னைப் பற்றி எப்படி நினைப்பார்கள் என்று, நினைப்பவர்களுக்கு, அது நிரந்தரமான மனநிலை ஆகிவிடும். எதுவாக இருந்தாலும், நான் முன்னேறுவேன் மற்றும் வளர்ச்சி அடைவேன் என்று, எண்ணம் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *