பிளாஸ்டிக் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் இன்றளவும் பிளாஸ்டிக் காகிதம் உபயோகிக்கிறார்கள்.
பிளாஸ்டிக் என்பது பிளாஸ்டிகோஸ் என்ற கிரேக்க சொல்லில் இருந்து பெறப்பட்டவையாகும். பிளாஸ்டிக் பைகள் எளிதில் மக்கும் தன்மையற்றவை. இவை நம் பூமியை அச்சுருத்தக் கூடியதாகும். ஆனால் நாம் பிளாஸ்டிக் பொருட்களை தான் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம்.

விளை நிலத்தில் இருந்து அரிசி சாகுபடி செய்து சாப்பிட வருவதற்குள், பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் உணவில் நிறைந்து விடுகிறது. எப்படி பிளாஸ்டிக் பொருட்கள் உணவில் கலந்து வருகிறது என ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
தினமும் ஒவ்வொரு மனிதனும் 35 கிலோ பிளாஸ்டிக்கை குப்பையில் போடுகிறான். பிளாஸ்டிக்குகள் சிதைந்து, மைக்ரோ மற்றும் நேனோ பிளாஸ்டிக் துகளாகிறது. இந்த துகள்கள் உலகமெங்கும் ஒவ்வொரு பகுதியிலும் பரவி வருகின்றன.

பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு சுமார் 100இல் இருந்து 1000 ஆண்டுகள் ஆகிறது. மளிகைப் பொருட்கள், துணிக்கடை, பால், மருந்துக் கடை, எலக்ட்ரிக் சாதனங்களில் இருந்து வரும் கழிவுகளை தனியாக ஒரு பையில் சேகரிக்க வேண்டும். மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கெட்டுப் போகக்கூடிய உணவுகளை மறறொரு தனிப் பையில் சேகரிக்க வேண்டும். இதன் மூலம், பிளாஸ்டிக் உணவுகளில் பரவுவதை தடுக்கலாம்.
முக்கியமாக மனிதன் உண்ணும் உணவுகளில், பிளாஸ்டிக் அதிகம் கலக்கிறது. இதனால் பல விதமான நோய்கள் பரவி வருகிறது. தாவரங்கள் மற்றும் விலங்குகளிலும் இந்த பிளாஸ்டிக் அதிவேகத்தில் பரவி வருகிறது.