Thursday, September 17, 2026

பெண்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று! என்ன தெரியுமா?

இது புதுசா இருக்குது!

எச்சிலை சோதித்து தங்களது கர்ப்பத்தை உறுதி செய்துக் கொள்ள புதிய வழிமுறை. பிரிட்டனில் புழக்கத்திற்கு வந்துள்ளது சாதனம்.

எல்லா பெண்களும் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று தெரிந்தவுடன், அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்வார்கள். ஆனால், அதை உறுதி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தற்போது பெண்கள் தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள, சிறுநீர் மாதிரி சாதனத்தை உபயோகிக்கிறார்கள்.

 

இதனை தொடர்ந்து எச்சிலை வைத்து, கர்ப்பத்தை உறுதி செய்யக்கூடிய சாதனம் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சாதனத்தை இஸ்ரேலை சேர்ந்த ‘சாலிக்னாஸ்டிக்ஸ்’ என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எச்சில் பரிசோதனை செய்யும் சாதனத்தை ஐரோப்பிய நாடான பிரட்டனில், விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

தெர்மோ மீட்டர் போன்று, வாயில் வைத்து எச்சில் வழியாக பரிசோதனை செய்ய முடியும். நாம் பயணம் செய்யும்பொழுது, அல்லது வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த சாதனத்தை பயன்படுத்தி, கர்ப்பத்தை தெரிந்து கொள்ளலாம்.

இது பிரிட்டனில் சாலிஸ்டிக் என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இந்த சாலிஸ்டிக்கை வாயில் வைத்த சில நொடிகளில் கர்ப்பம் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறும். இந்த சாலிஸ்டிக்கை வாயில் வைத்த சில நொடிகளில் கர்ப்பம் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *