Thursday, September 17, 2026

அந்த காலத்தில் இப்படி எல்லாம் வசிப்பிடங்கள் இருந்திருக்கிறதே! வெளியான விசித்திரமான புகைப்படங்கள்.

அக்கால கட்டிடகலைகள் எவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது. ஆனால் தற்போது ஆயிரம் தான் வசதி வளர்ந்திருந்தாலும், முன்பை போன்ற கட்டிடங்கள் அமைவதில்லை. சிறந்த விளங்கிய கட்டட கலைகளை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

அரண்மனைகள்

அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்த மன்னர்கள் அரண்மனையில் வசித்து வந்தார்கள். எதிரி நாட்டிடம் இருந்து மன்னரைக் காப்பாற்றுவதற்கு, கோட்டைகளாலும், பல கோபுரங்களாலும் அரண்மனை கட்டப்பட்டிருந்தது. அங்கு அரசர்களும், அரசிகளும்  கலாச்சாரத்தை பின்பற்றியும், நேர்த்தியுடன் உடையணிந்தும் வாழ்ந்து வந்தார்கள்.

பல ஆடம்பரமாக அந்த அரண்மனைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த கட்டிடக் கலை பார்ப்பதற்கு, இன்றளவும் பிரமிப்புடன் இருக்கிறது.

மாளிகைகள்

பெரும்பாலும், மாளிகைகள் நகர்ப்புறங்களில் கட்டப்படுகிறது. அங்கு மாளிகையில் இருக்கும் தோட்டம் நடந்து செல்லக்கூடிய பசுமையான பாதை, வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், என்று பல வசதிகளுடன் மாளிகைகள் கட்டப்படுகின்றன. இன்றும் கூட அந்த அளவிற்கு, கட்டட அமைப்பை பாக்க முடிவதில்லை.

பண்ணை வீடுகள்

பண்டைய காலத்தில் உள்ள மக்கள் தோட்டம் மற்றும் வயல் போன்ற இயற்கை சூழலில் பண்ணை வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தார்கள். இன்றும் கூட பண்ணை வீடுகள் பல ஊர்களில் இருக்கின்றன. ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடமைப்பாகும் இந்த பண்ணை வீடு. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும்.

அடுக்குமாடி கட்டிடங்கள்

அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல இன்றளவும் நகர்ப்புறங்களில், மக்கள் அதிகம் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி வாழ்ந்து வருகின்றனர். பல அறைகளைக் கொண்டு அடுக்குமாடி கட்டிடங்கள், இப்பொழுது அதிகம் வாடகைக்கு விடப்பட்ட வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *