Thursday, September 17, 2026

கருவளையம் வருவது உடலில் பாதிப்பு ஏற்படும் அறிகுறியா?..

இளைய தலைமுறையினர், இன்று சந்திக்கும் பிரச்சனை கருவளையம். இந்த கருவளையத்திற்கு ‘பெரயோபிட்டல் ஹைப்பர் பிகமென்டேசன்’ என்று கூறுவார்கள். இது வருவதற்கான முக்கிய காரணம் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடு தான். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதும் ஒரு காரணமாகும்.

மரபியல் காரணங்களாலும், கண்களில் உள்ள நிறமிகள் பாதிப்பாலும் கருவளையம் ஏற்படக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கு, கருவளையம் அதிகமாக இருப்பதற்கு காரணம், தரம் இல்லாத அதிக கெமிக்கல் கலந்த ஐ-லைனர், மஸ்காரா மற்றும் கண்மைகளை உபயோகிப்பது தான்.

கெமிக்கல் நம் கண்ணிற்கு சேராமல் போகும் பட்சத்தில், அலர்ஜி ஏற்பட்டு கருவளையம் வர தொடங்கும். மன அழுத்தம், மொபைலை அதிக நேரம் பார்ப்பது, தூரப்பார்வை மற்றும் கிட்ட பார்வைக்கு சரியான டிரீட்மென்ட் எடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் தற்போது, அனைவருக்கும் கருவளையம் வருகிறது.

வைட்டமின், இரும்பு சத்து குறைபாடு, தைராய்டு மற்றும் ஹார்மோன் பாதிப்புகளால் ஏற்படும் நோய்களால் கருவளையம் உண்டாகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வட்ட வடிவில், அறுத்து தூங்கும் போது கண்ணிற்கு மேல் சில மணிநேரம் வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து, செய்து வந்தால் கருவளையம் காணாமல் போய்விடும்.

இதற்கு பலவிதமான ஹோம் ரெமிடி உள்ளது. கரு வளையத்திற்கென பல கண் பயிற்சிகள் உள்ளன. இல்லையெனில், மருத்துவரை அணுகி சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *