Thursday, September 17, 2026

16 வருடத்திற்குப் பிறகு நடந்த அதிர்ச்சி!…இதயத்தை கண்ணால் பார்க்க முடியுமா?

ஒரு பெண் 16 வருடத்திற்கு பின் தான் இதயத்தை கண் முன்னே பார்த்து, வியந்தார். லண்டன் அருங்காட்சியில் அந்த பெண்ணின் இதயம் பதப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அதிசய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

லண்டனின் உள்ள ஹாம்ப்ஷயர் பகுதியில் வசித்து வரும் ஜெனிஃபர் சட்டன் என்பவருக்கு, 2007 ஆம் ஆண்டு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இதயம் பலவீனமாக உள்ளது என கூறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அவருக்கு இதய மாற்று சிகிச்சை செய்வதற்கு முடிவெடுத்தனர். பின்பு, அவரது ரத்தத்துடன் ஒன்றியிருக்கும் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

மேலும் 2007 ஆம் ஆண்டு ஜெனிபரின் பழுதடைந்த இதயம்  லண்டன் ஹன்டேரியன் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து ஆச்சரியமடைந்த ஜெனிஃபர், பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னில் துடித்துக் கொண்டிருந்த இதயம் இதுதான் என எண்ணி அந்த இதயத்தை  ஆச்ச்சரியத்துடன் உற்று நோக்கினார்.

கண்ணாடி ஜாரில் அமிலம் கொண்டு  பதப்படுத்தப்பட்டிருக்கும் தன் பழைய இதயத்தை கண் முன்னே காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும், இந்த காட்சி உலகில் யாருக்கும் கிடைக்காத எனவும், கூறியுள்ளார். இந்த விசித்தனமான நிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *