Monday, November 2, 2026

இதை கண்டிப்பாக படியுங்கள்! நாம் தினசரி வாழ்வில் செய்யும் தவறுகள்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்றும் உடலில் இதயம், நுரையீரல், மற்றும் பல நோயிலிருந்து, உடலை பாதுகாக்க அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறோம். அசைக்காமல் வைத்திருக்கும் போது பலவித நோய்களும் நம்மை வந்தடைகிறது.

அமெரிக்காவில் உள்ள ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலையை சேர்ந்த ஆராய்சியாளர் மைக்கேல் பிளாஹா கூறியதாவது, நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து விட்டு, அதை ஈடுகட்ட 30 நிமிடம் அல்லது 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, அதற்கு எந்த பலனும் இல்லை. உடற்பயிற்சி மற்றும் செயல்பாடு மிகவும் முக்கியம் என்கிறார்.

 

உடற்பயிற்சி மற்றும் செயல்பாடு!

உடற்பயிற்சி என்பது இதயத்தை பலப்படுத்தவும், தசைகளை வலுப்படுத்தும் உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும். செயல்பாடு என்பது நாம் ஓரிடத்தில் உட்காராமல் ஏதாவது ஒரு வேலையை கை, காலுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது. அதாவது ஒரு நாள் முழுவதும் ஓடி, ஆடி வேலை செய்வதை குறிக்கும்.

என்னதான் ஒரு மனிதன் 30 நிமிடம் அல்லது 40 நிமிடம் உடற்பயிற்சி செய்தாலும் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டாலும், நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்காரும்பொழுது, பல பிரச்சினைகளை சந்திக்கிறான். நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் போன்றவை உருவாக வாய்ப்புள்ளது.

ஆக்டிவாக இருங்கள்!

என்னதான் நீங்கள் சரியான உடல் எடை மற்றும் உயரத்தைக் கொண்டிருந்தாலும் அது ஆரோக்கியம் அல்ல. சில சமயங்களில் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை உண்டாக்குகிறது. இதனால் நாம் காலையில் எழுந்து உடற்  பயிற்சி செய்வது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தாலே உடல் சுறுசுறுப்பாகவும் மற்றும் நோய்கள் தாக்காமலும் இருக்கும்.

இதை செய்தாலே போதும்!

தினமும் காலை எழுந்து 30 நிமிடம் தீவிரமாக உடற்பயிற்சி செய்யுங்கள். மற்றும்  அதற்கேற்ற வகையில் உணவுகளை உட்கொள்ளுங்கள். பணியில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு இடத்தில் இருக்கும் பொழுதோ எழுந்து நடங்கள் அல்லது குதியுங்கள். இதன் மூலம் நமது உடல் சுறுசுறுப்பை பெறுகிறது. நாளைக்கு குறைந்த பட்சம் 10,000 எட்டு எடுத்து வைங்கள்.

இதனை தொடர்ச்சியாக நாம் செய்தும் பொழுது, நமது உடலை எந்த ஒரு நோயும் அண்டாது. மற்றும் நம்மால் எந்த வேலையையும் எளிதில் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *