Thursday, September 17, 2026

என்னங்க சொல்றீங்க.. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு கட்டாயம் இதெல்லாம் கொடுக்க வேண்டுமா.? வெளியான தகவல்..!

உங்களது குழந்தைகள் சுறுசுறுப்பாக பல மணிநேரம் விளையாடிக் கொண்டிருந்தாலும், திடீரென்று சோர்வடைவார்கள். அப்படி சோர்வடையாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

முக்கியமாக கோடைகாலங்களில் தான், குழந்தைகள் சோர்வடைகிறார்கள். வெப்பத்தின்  தாக்கத்தினால் குழந்தைகள் உடல் ரீதியாக  பாதிப்படைகிறார்கள்.  கோடை காலத்தில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளை, கொடுப்பது மிகவும் நல்லது.

சத்தான பானங்கள்:

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வை  நீக்குவதற்கு, அவர்களின் உணவில் புரோட்டின் சேக்ஸ்  போன்ற ஆரோக்கியமான பானங்களை கொடுப்பது குழந்தைகளை சுறுசுறுப்பாகவும், எனர்ஜிட்டிக்காவும் வைத்திருக்கும்.

இந்த புரொட்டின் ஷேக்குகள் தசை வளர்ச்சி மற்றும் நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளநீர்:

கோடைகாலத்தில் அனைவரின் கண்முன்னே தென்படுவது, இளநீர். இந்த இளநீரை குழந்தைகளுக்கு, கொடுக்கும் பொழுது உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை  தடுக்கலாம். இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், குழந்தைகளின் உடம்பில் ஆற்றலை இழக்காமல் வைத்திருக்கும்.

தயிர்:

கோடை காலத்திற்கு உடலிற்கு சிறந்த நண்பன் தயிர். தயிரில் கால்சியம், புரோபயாடிக்குகள் மற்றும் புரதம் அடங்கியுள்ளது. இதில் உள்ள ப்ரோபயாடிக்குகள் எளிதில் ஜீரணம் அடையச் செய்கிறது. குழந்தைகளின் உடம்பில் நீரேற்றம் அடைவதற்கும் தயிர் உதவி புரிகிறது. தயிரில் மாதுளை பழத்தை சேர்த்து, குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், தயிர் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

காய்கறிகள்:

வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்பு, கால்சியம், போலிக் ஆசிட் மற்றும் பல வகையான

தாதுக்கள் காய்கறியில் நிறைந்துள்ளது. இதனால், குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கின்றனர். இதனால் கோடைகாலத்தில் சுறுசுறுப்பாக செயல்பட இயலும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் நார்ச் சத்துக்கள்கள், வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்திருக்கின்றன. இதன் மூலம் குழந்தைகள் உடலிற்கு நீர்ச்சத்தினை பெறுகின்றனர். இது மட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் கோடைகாலத்தில், வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்,  உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *