Friday, September 18, 2026

இறந்து மீண்டும் உயிருடன் வந்த நபர்! உண்மையில் நடந்தது என்ன!

குடும்ப உறுப்பினர்களுக்கு தனது அருமை புரிய வைப்பதற்காக இறந்ததாக கூறி, போலி இறுதிச் சடங்கு நடத்திய பெல்ஜியத்தைச் சேர்ந்த tiktok பிரபலம்.

ஆச்சரியமாக உள்ளதே படத்தில் நடப்பது போலவே உண்மையில், தான் இறந்ததாக கூறி குடும்ப உறுப்பினர்களை வரவைத்து, நாடகம் நடத்தினார் பிரபல tiktok ராக்னார். தமிழ் திரைப்படமான சிவாஜி படத்தில் ரஜினி இறந்ததாக நம்பப்பட்டு, பின்பு அவர் ஹெலிகாப்டரில் மீண்டும் திரும்பி வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.

 

அதேபோல் ஒரு சம்பவம் பெல்ஜியத்தில் நிகழ்ந்துள்ளது. டிக்டாக் பிரபலமான ராக்னர் லெ ஃபோ என்ற பெயரில் உலா வரும் டேவிட் பேர்ட்டன், 45 வயதான இவர் இறந்ததாக நாடகமாடி. பின்பு ஒரு ஹெலிகாப்டரில் பறந்து வந்து, குடும்பத்தினர் அனைவரையும், ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.

பேர்டனின் மகள்களில் ஒருவர், தந்தையின் மரணத்தை உறுதி படுத்தும் வகையில், ‘வாழ்க்கை ஏன் இப்படி செய்கிறது’, இன்னும் உங்களுக்கு வாழ்க்கை முழுமையாக முடியவில்லை. நீங்கள் பார்க்க வேண்டியது இருக்கிறது என்றும், நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம், உங்களை ஒரு போதும் மறவ மாட்டோம். என்று டிக்டாக்கில் சோகமாக பதிவிட்டிருந்தார்.

பின்னர், ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பேர்ட்டனை பார்த்துவிட்டு, குடும்பத்தினர் அவரை கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.

இதைப் பற்றி டேவிட் பேர்டன் கூறுகையில்,

என்னை எதற்காகவும் அழைப்பதில்லை. யாரும் என்னை பார்க்க வருவதில்லை. என்னை யாரும் பாராட்டவில்லை என நான் உணர்ந்தேன். என் குடும்பத்தினருக்கு, பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படி ஒரு போலி சடங்கை அரங்கேற்றினேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒருவரை சந்திக்க வேண்டும் என்றால், அவர்கள் இறக்கும் வரை நீங்கள் காத்திருக்கக் கூடாது, என்ற பாடத்தை என் குடும்பத்தினருக்கு புகட்டினேன் என்று டேவிட் கூறியுள்ளார்.

பகிரப்பட்ட இந்த வீடியோ சுமார் பத்து லட்சம் பார்வைகளுடன், சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனைப் பார்த்துவிட்டு, ‘ ஒருவேளை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருந்ததால்’ என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர், மதிப்பு மிக்க வாழ்க்கை பாடத்தை புகட்டிய அவருக்கு பின்னால் இருக்கும் நோக்கத்தை புரிந்து கொள்கிறேன், என்று கருத்திட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *