இரவு குறைவாக தூங்கி காலையில் எழும்பொழுது உடல் சோர்வாகவும் மற்றும் எந்த வேலையிலும் நாட்டம் இல்லாமல் இருக்கும். இதன் மூலம் நமது உடம்பில், கொழுப்பு அதிகம் சேருகிறது.
குழந்தைகள் அதிக நேரம் தூங்கும் பொழுது அவர்களது வளர்ச்சிதை மாற்றம் மற்றும் தூக்கம் பல உறுப்புகள் பெரிதடைய வழிவகை செய்கிறது. நாம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆழ்ந்து தூங்கும் பொழுது, உடலில் உள்ள பழைய செல்கள் நீங்கி, புதிய செல்கள் உருவாகிறது. இதனால் சருமம் பொலிவடையும் மற்றும் நமது உடல் உறுப்புகள் அனைத்தும், புத்துயிர் பெற்று இளமையுடன் தோற்றமளிக்கும். நாம் ஆழ்ந்த உறங்குவதால், முதுமையை தடுக்கலாம்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு மனிதன் 7 இல் இருந்து 9 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கும் பொழுது நமது உடலில் முதுமை விரைவாக தோன்றிவிடுகிறது. மற்றும் இரவில் போதுமான தூக்கம் இல்லாமல் காலையில் எழும்பொழுது நமது சருமம் பொலிவிழந்தும், உடல் சோர்வடைந்தும் காணப்படுகிறது.
ஆழ்ந்த தூக்கத்தின் நன்மைகள்:
பகலில் நாம் செய்யும் வேலைகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக, நமது சருமம் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. ஆழ்ந்து நாம் உறங்கும் பொழுது, வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிப்பதால் புதிய செல்கள் உருவாகி, நமது சர்மம் மற்றும் உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைப்பதால் கொலாஜன் உண்டாகும். இதன் மூலம் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள், கோடுகள் போன்றவற்றிலிருந்து நமது சருமத்தை பாதுகாக்கலாம்.

உடல் எடை:
குறைவான தூக்கம் நமது உடலில் ‘கிரெலின்’ எனும் தேவையற்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இதனால் நாம் உணவை அதிகமாக எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் கிடைக்கும் எனர்ஜி உடலில், கொழுப்பாக மாற்றப்பட்டு உடல் எடையை அதிகரிக்கும். அதனால், நாம் சீராக ஒரு 8 மணி நேரம் தூங்கும் பொழுது, நமது உடல் புத்துயிர் பெற்று, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

இரவில் தூங்க செல்வதற்கு முன்னர்,குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டு தூங்க செல்லலாம். மற்றும் அதிக உப்பு, காரம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நாம் நல்ல உறக்கத்தை பெற முடியும்.