அயர்ன் பாக்ஸ் சூடாகிய பிறகு, ஒரு கோழித் துண்டை போட்டு வறுத்தெடுக்கிறார் ஒருவர். இப்படி ஒரு வித்தியாசமான முறையில் சமையலா!..வைரலாகும் வீடியோ.
முற்காலத்தில் எல்லாம் சமையல் செய்வதற்கு, விறகு நிலக்கரி இடுப்பை பயன்படுத்தி வந்தார்கள். இப்பொழுது அனைவரின் வீட்டிலும் சமையல் எரிவாயு உபயோகிக்கிறோம். வீடுகள் மட்டுமின்றி தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
விறகு அடுப்பு
ஒரு காலகட்டத்தில், காய்ந்து கிடக்கும் தென்னையை தான் விறகு என்பார்கள். அதனை எடுத்து, மண்ணெண்ணெயை உபயோகித்து நெருப்பு மூட்டி சமையல் செய்து வந்தார்கள். தீயை மூட்டுவதற்கென குழலும் வைத்திருப்பார்கள்.

சமையல் எரிவாயு
காலம் செல்ல செல்லத் தான் இந்த சிலிண்டர் எரிவாயு வந்தது. மாசுக்களை கட்டுப்படுத்துவதற்கும், மற்றும் வெளியில் பணிக்குச் செல்லும் பெண்கள் எளிதில் சமையலை முடிப்பதற்கும் சிலிண்டர் எரிவாயு உபயோகமாகிறது.

ஆண்களும் சரி பெண்களும் சரி சமையல் தெரியவில்லை என்றால் முதலில், கண்கள் தேடுவது youtubeஐ தான். ஏனென்றால் அந்த இணையத்தில், விதவிதமான சமையல்கள் எப்படி செய்வது என சமையல் கலைஞர்கள் வீடியோக்கள் போட்டிருப்பார்கள்.
ஆனால் இங்கு ஒருவர் அயன் பாக்ஸை வைத்து சமையல் செய்துள்ளார். இதை உங்களால் நம்ப முடிகிறதா!…
அயன் பாக்ஸ் சூடாகிய பிறகு கோழி துண்டை போட்டு, ஒருபுறம் வெந்த கோழியை எடுத்து மறுபுறம் கரண்டியில் திருப்பிப் போடுகிறார். இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பகுதியில் பதிவிட்டிருந்தார்.

வித்தியாசமாக இவர் சமைத்த சமையலை கிட்டத்தட்ட 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்து அதிர்ந்து போன பார்வையாளர்கள், ஒவ்வொரு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ‘ஒருவேளை வாஷிங்மெஷினில் கோழியை கழுவியிருப்பார்’ எனவும் ‘மறுநாள் உங்கள் சட்டையில் கோழி வாசனை வரும் என நினைத்துப் பாருங்கள்’ எனவும், மற்றொருவர் ‘இது பாய்ஸ் ஹாஸ்டல் விவகாரம்’ எனவும் காமெடியாக பதிவிட்டுள்ளார்கள்.