பொதுவாக அனைவரும் கோடை காலங்களில் தான் தர்பூசணியை அதிகம் விரும்புகிறோம். தர்பூசணியில் உள்ள விதைகள் எவ்வாறு பயன்படுகிறது, என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்.
கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தான் இந்த தர்பூசணியை தேடிச் செல்கிறோம்.
நீர்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த தர்பூசணி மற்றும் விதைகளில் எவ்வளவு சத்து உள்ளது என்பது நமக்கு தெரிவதில்லை. தர்பூசணி பழத்தில் நார்சத்து, வைட்டமின்கள் தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இதில் மட்டுமல்ல இதன் விதையிலும் பல்வேறு சத்துக்களும்,உடல் ஆரோக்கியத்திற்கான மூலக்கூறுகளும் அமைந்துள்ளது.

அந்த காலக் கட்டத்தில் மழைக்காலங்களில் தர்பூசணி விதையை குளிருக்கு இதமாக வறுத்து சாப்பிடுவார்கள். இன்றளவும் கிராமப்புறங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
தர்பூசணி விதையில் நிறைந்துள்ள சத்துக்கள்!
இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதம் துத்தநாகம், பொட்டாசியம், கொழுப்பு மற்றும் தாமிரம் போன்ற பல வகையான சத்துக்கள் முறை தர்பூசணி விதையில் அடங்கியுள்ளது.
விதைகளின் பயன்கள்
இந்த விதை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், மற்றும் நமது உடலை நோய் எதிர்ப்பு சக்தியாக மாற்றுகிறது. மேலும் தர்பூசணி இடையில் உள்ள மாங்கனிஸ் பொட்டாசியம் சத்துக்கள் எலும்பை பலப்படுத்த உதவுகிறது. தர்பூசணி விதையை சாப்பிட்டு வருபவர்கள் எலும்புச் சிதைவு நோயில் இருந்து விடுபடலாம்.

விதைகளில் உள்ள இரும்புச் சத்துக்கள் மற்றும் தாதுக்கள் மூளையின் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க துணை புரிகிறது. முளை கட்டிய விதையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததாகும். மேலும் தர்பூசணி விதையின் எண்ணெய் நமது முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் முதிர்ச்சியை தடுக்கும் உதவுகிறது.
முக்கியமாக தர்பூசணி விதைகளில் உள்ள தாதுக்கள் நார்ச்சத்துக்கள் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை எலும்பு சிதைவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கவும், மற்றும் எலும்பை பலப்படுத்தவும் உதவுகிறது.