Thursday, September 17, 2026

சொந்த மகளுக்கு பணம் கொடுத்த பெற்றோர்! சீனாவில் நடந்த கொடுமை.

சொந்த பெற்றோரிடம் மகளாக இருப்பதற்கு மாதச் சம்பளமாக ரூ 47,000 பணம் வாங்கும் கொடுமை. சீனாவில் அரங்கேரி வருகிறது.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு என பெயர் வாங்கியது சீனா. தற்போது, மக்கள் தொகை அதிவேகமாக சரிந்து வருகிறது. இதனால் மக்கள் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், சிரமப்பட்டு வருகிறார்கள். மற்றும் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை சந்தித்து வருகிறது சீனா. இதனைத் தொடர்ந்து மக்கள் பெருக்கத்தை அதிகரிக்க, சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

செய்தி ஒன்று வெளியிட்ட சீனாவின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் கூறியதாவது, நியானன்(40) என்ற பெண்மணி நியூஸ் ஏஜென்சி ஒன்றில் தொகுப்பாளராக 15 ஆண்டுகள் வேலை செய்து வந்துள்ளார். கடந்தாண்டு அவருக்கு வேலைப் பளு அதிகரித்ததால் மனம் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.  அதனை கண்காணித்த அப்பெண்ணின் பெற்றோர், “உன் வேலையை விட்டுவிடு, நாங்கள் உனக்கு பொருளாதார அடிப்படையில் உதவியாக இருக்கிறோம்” என முன்வந்துள்ளனர்.

 

இதனை அடுத்து, வேலையை விட்டுவிட்டு தனது பெற்றோருக்கு முழுநேர மகளாக இருப்பதற்கு, அந்தப் பெண் மாதம் 4,000 யுவான்(ரூ 47,000)சம்பளமாக வாங்கி வருகிறார்.

காலையில் எழுந்தவுடன் தினமும் ஒரு மணி நேரம் தனது பெற்றோருடன், நேரத்தை செலவிடுவது, பெற்றோருடன் சேர்ந்து, மளிகை பொருட்களை வாங்கி வருவது, உணவு தயாரித்து சாப்பிடுவது, விடுமுறை பயணத்தை ஜாலியாக திட்டமிடுவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.

என்னதான் நேரத்தை பெற்றோருடன் செலவிட்டாலும், பணம் சம்பாதிக்க ஆசை என நியான் பெற்றோரிடம் கூறியுள்ளார். சரியான வேலை கிடைக்கும் வரை மாத சம்பளம் கொடுப்போம் என பெற்றோர் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *