Wednesday, September 16, 2026

திருமண ஆடையை கொளுத்தி….. விவாகரத்தை வினோதமாக கொண்டாடிய பெண்….. வைரலாகும் புகைப்படம்….!!!!

ஆடைக்கு தீயிட்டு கொண்டாடும் பெண் !

பெண்கள் எப்பொழுதும் ஆடை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.  ஆனால், ‘ஏன் இந்த பெண் மட்டும் ஆடையை எரித்தார்’? எதற்காக இனி காண்போம்..!  அமெரிக்காவைச் சேர்ந்த பெண், லாரன் புரூக் (31). இவருக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, திருமண பந்தம் வேண்டாம் என 2021ல் தனது கணவனிடம் இருந்து பிரிந்தார்.

இதைத் தொடர்ந்து சட்டப்படி பிரிய நினைத்து இந்த ஆண்டு ஜனவரியில் லாரன் புரூக் கணவரிடமிருந்து, விவாகரத்து பெற்றார். இதையடுத்து, சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் இருந்த அவர் கணவருடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படத்தை கிழித்தார். இத்துடன் தனது திருமண புகைப்படத்தை எரித்து கிழித்து விவாகரத்தை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

 

இனி வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே!

இதுகுறித்து மிரர் யுகே-யிடம் விளக்கம் அளித்த லாரன். அதாவது விவாகரத்து செய்வது என்பது எளிதல்ல.  அது வேதனைக்குரிய விஷயம்.  இதை ஒரு மகிழ்ச்சியாக தெரிவிப்பதே எனது நோக்கம் என்றார் லாரன். இதற்குமுன், இதை நினைத்து காலையில் அழுகாத நாட்களே இல்லை.

முன்னேற்றம் எனக்கு இல்லை என நினைத்து வருந்திய நாட்கள் அதிகம். ஆனால் தற்போது நான் காலையில் எழும்போது மிக உற்சாகத்துடன் உணர்கிறேன் என லாரன் புரூக் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார். லாரன் மகிழ்ச்சியாக விவாகரத்து செய்ததை கொண்டாடிய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பபிட்டி (pubity ) என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளார். அதில் அவர் உற்சாகத்துடன் ஆடையை கிழித்து , புகைப்படத்தை எரித்து கொண்டாடும் லாரனை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *